விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, February 2, 2022

வயிரு வலி-அல்சர்-அதிகமா ஏப்பம்-நெஞ்செரிச்சல்-நெஞ்சுக்கரிப்பு-வராமல் தடுக...





கேள்வி: உயர்திரு மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு 36 வயதாகிறது. நான் சேல்ஸ் ரெப்பாக வேலை செய்கிறேன். மாசத்துல 25 நாளைக்கு நான் வெளில தான் சாப்புடுரேன். சரக்கு அடிக்கர பழக்கமும் இருக்கு. அடிக்கடி எனக்கு வயிரு வலிக்குது. கேஸ் டிரபுல் வந்து வயிரு உப்பிக்குது. அதிகமா ஏப்பம் ஏப்பமா வருது, கீழயும் நெறய வாயு பிரியுது. சாப்டாலே வயிரு வலிக்குது, உடம்பு ரொம்ப அசதியா இருக்குது. எட வேற கொரஞ்சிபோச்சி. டாக்டர் கிட்ட காமிச்சேன் அல்சர் நு சொன்னாங்க, மருந்து நெறய குடுத்தாங்க, மருந்து சாப்புடும்போது வலி கொஞ்சம் கொறயுது. ஆனா திரும்பவும் வருது. எனக்கு கல்யானம் ஆயி ரெண்டு பொண்ணு பசங்க இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இத நெரந்தரமா சரிபன்ன முடியுமா. எதனால எனக்கு வயிரு வலிக்குது. தண்ணி அடிக்கறத நிருத்திட்டேன் இப்போ. எனக்கு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க. உங்கல தான் நா நம்பி இருக்கேன். கொஞ்சம் தயவு செஞ்சி பதிலும் சிகிச்சையும் குடுங்க டாக்டர். பிளீஸ்

 

மருத்துவர் பதில்: கவலை வேண்டாம், சரியான சிகிச்சையும், உணவுப்பழக்கங்களும் நடைமுறை மாறுதல்களும் முறையாக மேற்கொண்டால் அல்சர் எனப்படும் வயிறு குடல் புண் பிரச்சனையிலிருந்து வெளிவந்துவிடலாம், அல்சர் எனப்படும் புண்களை பற்றி விரிவாக கீழே கொடுத்துள்ளேன் படித்துவிட்டு என்னை நேரில் சந்திக்கவும்.

 

அல்சர் குடற் புண் – Ulcer Stomach

 

அல்சர் என்றால் என்ன? – What is mean by Ulcer

  • அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.
  • Ulcer means wound or injury in stomach wall or Duodenal wall

 

அல்சர் வர காரணம் – Causes for Ulcer,

Ø  ஹெலிகோபாக்டெர் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது. Helicobacter Pylori

Ø  வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது. Hyper acid secretion in stomach, hyper acidity,

Ø  உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது. Physical and mental stress,

Ø  சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது. Regular intake of some medicines especially pain killers,

 

அல்சர் அறிகுறிகள் – Ulcer Symptoms

ü  சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்). Feel better after having food or water, but feel more pain in stomach after 2 hrs is the indication for Duodenal Ulcer,

ü  சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்). Pain and burning sensation in stomach is the indication for Gastric ulcer,

ü  இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல். Pain and burning sensation in stomach and its disturb the sleep.

ü  வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி. Bloating abdomen, heaviness in stomach, Gas in stomach, Burning in stomach, pain in stomach, Dullness in stomach,

ü  வாந்தி vomiting,

ü  எதிர் பாராத உடல் எடை இழப்பு. Sudden loss of weight

 

கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள் – how to avoid ulcer,

v  புகைபிடிக்கக் கூடாது – Don’t smoke,

v  மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும். Don’t take any self medication especially pain killers,

v  காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும் – avoid coffee and alcohol,

v  நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். Avoid Chilly and Spicy foods that causes heart stomach burning,

 

அல்சர் மோசமடைதலின் அறிகுறிகள் – Severe ulcer symptoms,

ü  இரத்த வாந்தி ஏற்படுதல். Blood vomiting,

ü  சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல். Vomiting the stomach contents eat by few hours or day,

ü  வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல். unusual weakness and giddiness,

ü  மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)- Blood in Stool. Black colour motion,

ü  தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி – continues nausea or vomiting,

ü  திடீரென மோசமான வலி sudden sever pain

ü  தொடர்ந்து எடை குறைவு – gradual weight loss,

ü  மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல் – no pain relief even after taking medicines,

ü  வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல். – pain radiating towards back side

 

அல்சர், கேஸ் டிரபுள் ஹோமியோபதி சிகிச்சை

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்